வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரசகியத் தகவலுக்கு அமைவாக அரநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபத்கமவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதனா நபர் நெலும்தெனியா பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், மீட்கப்பட்ட துப்பாக்கியுடன் அரநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.















