நாடாளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதை இலக்காகக் கொண்டு நேற்று (22) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது 458 நபர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் ஆயுதப்படைகள் ஒருங்கிணைந்த முயற்சிகளில் இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, அதிகாரிகள் கணிசமான அளவு சட்டவிரோதப் பொருட்களைக் கைப்பற்றினர்.
இதில் 728.25 கிராம் ஐஸ், 166.822 கிராம் ஹெராயின் மற்றும் 583.71 கிராம் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடுவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.














