பிரேசிலின் முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை (Jair Bolsonaro) வீட்டுக் காவலில் வைக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விசாரணையில் உள்ளார்.
எனினும், அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
போல்சனாரோவை விசாரிக்கும் பொறுப்பான நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், கடந்த மாதம் தனக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளை போல்சனாரோ பின்பற்றாததால் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறினார்.
இந்த உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக, போல்சனாரோவின் சட்டக் குழு எந்தவொரு தடை உத்தரவையும் மீறவில்லை என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகவும் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் பல்வேறு நகரங்களில் போல்சனாரோ ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


















