அனுஷ்கா நடிக்கும் காதி திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளையத்தினம் வெளியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் அனுஷ்கா, தற்போது “காதி” (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு, தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார்.
ஜூலை 11 அன்று இந்த திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில், பட வெளியீட்டுத் திகதியைப் படக்குழு ஒத்தி வைத்தது.
இந்நிலையில், காதி படத்தின் ட்ரெய்லர் ஓகஸ்ட் 6 ஆம் திகதி வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


















