மீகொடையில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ உயிரிழந்துள்ளார்.
சாந்த முதுங்கொடுவ மீகொட, அட்டிகல வீதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகளினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சிகிச்சைக்காக ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து மீகொடை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














