காசா போரை நிறுத்தி, ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்டு வருமாறு கோரி இஸ்ரேலியர்கள் நேற்று டெல் அவிவ் நகரில் பாரிய போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்தை முடக்கி, வீதியின் குறுக்கே கார் டயர்களை அடுக்கி தீ வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் குறித்த பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது . இதேவேளை போராட்டக் காரர்களை பொலிஸார் கலைக்க முயன்றபோது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
அண்மையில் ஹமாஸ் பிடியில் உள்ள 50 பணயக் கைதிகளில் சுமார் 20 பேர் மட்டுமே உயிருடன் இருக்கக்கூடும் என இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, பயணக் கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















