இந்தியாவில் குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் பதவியை பறிக்க வழிவகை செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவினால் குறித்த சட்ட மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த புதிய சட்ட மூலத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்” மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவதே சிறந்த முடிவு. அப்போதுதான் நாடு சிறப்பாக செயற்பட முடியும் . நாட்டிற்கு இதுபோன்ற பல்வேறு மாறுதல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் அவசியமாகும்“ எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் மாநாடு நடைபெறும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.














