குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
















