குளியாப்பிட்டியவில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இரண்டு மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் மூன்று மாணவர்கள் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த மீதமுள்ள எட்டு மாணவர்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளியாப்பிட்டிய, பல்லேவெல, விலபொல பாலத்திற்கு அருகில் இன்று காலை 07.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி, 15 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் வேனின் சாரதி மற்றும் 12, 13 வயதுடைய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மீதமுள்ள மாணவர்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















