நடிகர் தனுஷ் நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் பாடலின் ப்ரமோ வீடியோவொன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.
இயக்குநர், ஹீரோ, பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் நான்காவதாக உருவாகியுள்ள திரைப்படம் இட்லி கடை.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இட்லி கடை படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்பதை ப்ரமோ வீடியோவொன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


















