தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லோலுவவின் பிணை மனுவை நிராகரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
அதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாரஹேன்பிட்டி பகுதியில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் ஹல்லோலுவ பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு செய்த சம்பவம் தொடர்பான விசாரணையில் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














