நேபாளத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த அசாம்பாவிதங்களும் நடந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.
காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகத்தின்படி, தற்போது நேபாளத்தில் மொத்தம் 102 இலங்கையர்கள் வசித்து வருகின்றனர்.
தூதரகம் சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட வலைப்பின்னல்கள் மூலம் சமூகத்தினருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகிறது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்கிறது.
நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் தங்களுக்குத் தேவைப்படும் எந்தவொரு உதவிக்கும் தூதரகத்தைத் தொடர்புகொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காத்மாண்டுவில் உள்ள தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை நிலவி வருகிறது.
திங்களன்று பொலிஸாருடனான மோதல்களில் 19 ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்தனர், நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
வன்முறை அங்கு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி செவ்வாயன்று (09) இராஜினாமா செய்துள்ளார்.















