ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அத்துடன் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தது.
17ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள டுபாய் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
தொடரின் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தியிருந்தன.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அணியின் சார்பில் Sediqullah Atal ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். இதனை தொடர்ந்து 189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய ஹொங்கொங் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணிக்காக 21 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த அஸ்மதுல்லா ஒமர்சாய் (Sediqullah Atal ) தெரிவு செய்யப்பட்டார்.



















