2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் நேற்றிரவு (10) நடைபெற்ற ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிவம் துபே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 57 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
அதேநேரம், இந்தியா ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குல்தீப் யாதவ் தனது சிறப்பான கூக்லி பந்து வீச்சால் எமிரேட்ஸ் தரத்தில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதே நேரத்தில் துபே 4 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இறுதியில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எமிரேட்ஸ் அணி 13.1 ஓவர்களில் 57 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இது இந்தியாவுக்கு எதிரான மிகக் குறைந்த டி20 ஓட்ட எண்ணிக்கையாகும்.
பின்னர், இலகுவான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா வெறும் 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 60 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை கடந்தது.
இந்தியா சார்பில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 30 ஓட்டங்களையும், ஷுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 20 ஓட்டங்களையும் எடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் தெரிவானார்.



















