அமெரிக்காவிற்குச் சென்று கொண்டிருந்த வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடததியது.
அண்மைய வாரங்களில் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் படகு மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (15) திங்களன்று தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தாகவும், இந் சம்பவம் சர்வதேச கடல் பகுதியில் நடந்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், படகில் போதைப்பொருள் இருந்ததாக ட்ரம்ப் கூறிய கருத்துக்கான எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை.
போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று அதிகாரிகள் கூறிய தெற்கு கரீபியனுக்கு அமெரிக்கா போர்க்கப்பல்களை அனுப்பிய பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்தன.
இதில் 11 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















