ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ” காந்தாரா – செப்டர் 1″ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இப் படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘காந்தாரா’.
இந்தப் படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
படத்துக்கு அஜ்னீஷ் லோகேஷ் இசையமைத்தார்.
15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் உலக அளவில் 400 கோடி ரூபாவுக்கு அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியானது.
படத்தின் வரவேற்பால், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீக்வல் அதாவது இதன் முந்தைய பாகமாக ‘காந்தாரா செப்டர் 1’ உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கியுள்ளார்.
இதில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளதுடன் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


















