இப்படம் வருகிற 26 ஆம் திகதி திரைக்கு வரும் நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது.
குறித்த விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த யுவினா, “அஜித்துடன் நான் இணைந்து நடித்ததால் மட்டுமே எனக்கு அடையாளம் கிடைத்திருக்கிறது. ரஜினியுடன் மீனா ஜோடியாக நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் நான் அஜித்துக்கு ஜோடியாக நடித்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அஜித்தும் அதனை விரும்ப மாட்டார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் யுவினாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




















