தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், கட்சித் தலைவர் விஜய்யின் அண்மைய தேர்தல் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த கரூர் கூட்ட நெரிசலுக்கு திராவிரட முன்னேற்றக் கழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் காவல்துறையைக் குற்றம் சாட்டியுள்ளார்.
உயிரிழந்தவர் 51 வயதான அய்யப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் ஒரு தொலைக்காட்சி ஊழியராவார்.
அவர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது வயதான பெற்றோரைப் பார்க்க மயிலம் கிராமத்திற்குச் சென்றார்.
திங்கட்கிழமை, யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அவரது தாயார் முனியம்மாள் தூக்கில் தொங்கிய நிலையில் அவரைக் கண்டுபிடித்து மற்றவர்களுக்கு தகவல் அளித்தார்.
அதைத் தொடர்ந்து செஞ்சி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட கடிதத்தில்,
விஜய் கரூர் வந்தபோது போதுமான பொலிஸ் பாதுகாப்பு இல்லை.
விஜய் ரசிகர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
செந்தில் பாலாஜி காரணமாக இந்த சோகம் நிகழ்ந்தது.
பொலிஸாரும் இதில் உடன்பட்டுள்ளனர்.
அவரை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் – என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அய்யப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



















