ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டுக்காக வெலிகட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நால்வர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 முதல் 60 வயதுக்குட்பட்ட கொழும்பு, ராஜகிரிய மற்றும் கம்பஹா பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் நீண்ட காலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கடத்தல் நாவல, ராஜகிரிய மற்றும் நாரஹேன்பிட்டியை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகட பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேக நபர்கள் குறித்து மேலும் விசாரணையை மேற்கொண்டுள்ளது.



















