நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்தளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய , சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் குறித்த காலப்பகுதியில் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.














