அடிலெய்ட் ஓவலில் நாளை (23) ஆரம்பமாகும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா மீண்டும் எழுச்சிப் பாதைக்கு கொண்டு வருவதற்காக விராட் கோலி காத்திருக்கிறார்.
அதேநேரம், 36 வயதான அவர் அடிலெய்டில் 1000 சர்வதேச ஓட்டங்களை எடுத்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற இன்னும் 25 ஓட்டங்கள் மட்டுமே தேவை.
12 போட்டிகளில், கோலி 65 சராசரியுடன் 975 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
இதில் ஐந்து சதங்கள் மற்றும் நான்கு அரைசதங்களும் அடங்கும்.
ஒட்டுமொத்தமாக, கோலி பட்டியலில் 13 ஆவது இடத்தில் உள்ளார்.
முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் 32 போட்டிகளில் இருந்து 53.36 சராசரியுடன் 2188 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதில் ஏழு சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் அடங்கும்.
ஆப்டஸ் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறிவிட்டார்.
மிட்செல் ஸ்டார்க்கிடம் எட்டு பந்துகளில் டக் அவுட்டானார்.
மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் இந்தியா இறுதியில் 26 ஓவர்களில் 136/9 என்று கட்டுப்படுத்தப்பட்டது.
பின்னர் டக்வெத் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை இலகுவாக கடந்தமையும் குறிப்பிடத்தக்கது.














