வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களில் மூவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (28) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று மேலும் இரண்டு நபர்கள் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














