2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
இந்தப் போட்டினது இலங்கை நேரப்படி இன்று பிறப்கல் 3.00 மணிக்கு கவுகாத்தியில் அமைந்துள்ள
பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது அரையிறுதி மோதலாக இது இருக்கும்.
இதில் நாட் ஸ்கைவர்-பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்துக்கு சாதகமான வாய்ப்புகள் உறுதியாக உள்ளன.
மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணி மோதிய நான்கு அரையிறுதிப் போட்டிகளில், 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மாத்திரமே இரண்டு வெற்றிகளைப் பெற்றது.
இங்கிலாந்து மகளிர் அணி 2017 ஆம் ஆண்டில் நான்காவது உலகக் கிண்ண பட்டத்தை வென்றது.
மறுபுறம் தென்னாப்பிரிக்க அணி, முந்தைய மூன்று அரையிறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், இன்னும் தங்கள் முதல் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறது.
போட்டியின் தொடக்கத்தில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் ஒரு மோசமான நினைவாக இருக்கும்.

இன்று தொடங்கும் போட்டி சீரற்ற வானிலையால் பாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டாலும், ரிசர்வ் நாள் இருப்பதால் எந்த கவலையும் இல்லை.
ரிசர்வ் நாளில் கூட ஆட்டம் நடைபெறவில்லை என்றால், புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும்.



















