நியுயோர்க் சிட்டி மற்றும் சார்லோட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட பிளேஓப் சுற்றின் முதல் போட்டியில் நியுயோர்க் சிட்டி அணி 1-0 என வெற்றிப்பெற்று அசத்தியது.
மேஜர் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது .
குழூ நிலை போட்டிகள் நிறைவடைந்து பிளேஓப் சுற்றுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் முக்கியமான போட்டியில் நியுயோர்க் சிட்டி மற்றும் சார்லோட் அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.
போட்டியின் 34வது நிமிடத்தில் நியுயோர்க் அணி வீரர் அலொன்சோ மார்ட்னஸ் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்க சார்லோட் அணி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைய முதல் பாதி ஆட்டம் 1-0 என நிறைவடைந்தது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் வெற்றியை தக்க வைக்க நியுயோர்க் அணியும் போட்டியை சமப்படுத்த சார்லோட் அணியும் பல முயற்சியை மேற்கொண்டும் எதுவும் கைகூடவில்லை.
இதனால் நியுயோரக் சிட்டி அணி இறுதியில் 1-0 என வெற்றிப்பெற்று 3 போட்டிகளை கொண்ட பிளேஓப் சுற்றில் முன்னிலைப்பெற்றது.



















