இங்கிலாந்து மன்னரின் சகோதரர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தி உயிரிழந்த வர்ஜீனியா கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஆண்ட்ரூ மீது “விசாரணை” நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து வரும் நிலையில் இது குறித்த கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
குழந்தை பாலியல் குற்றவாளி நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் “நேரில் சந்திப்பது நல்லது” என்று கூறி ஆண்ட்ரு அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த குற்றத்துடன் தொடர்புடைய குற்றவாளியான சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டீன், கடந்த 2009 ஆண்டு ஜூலை விடுவிக்கப்பட்டார்.
அந்த மாத இறுதியில் இங்கிலாந்தின் அமெரிக்க வங்கியாளர் ஜெஸ் ஸ்டாலியைச் சந்திக்க வேண்டும் என்று பரிந்துரைத்து 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று அப்போதைய இளவரசருக்கு அவர் மின்னஞ்சல் அனுப்பினார்.
இதேவேளை, அந்த திகதியில் தான் இங்கிலாந்தை விட்டு வெளியேறுவதாகவும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நியூயார்க்கிற்கு “வர” முயற்சிப்பதாகவும் ஆண்ட்ரூ பதிலளித்திருந்தார்.
இதில் கோடைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரை நேரில் சந்திப்பது நல்லது என்றும் அவர் ஆண்ட்ரு அந்த மின்னஞ்சலில் கூறியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவர் குறித்த குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிவித்து அவரை மாளிகையை விட்டு வெளியேற்றியதுடன் அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வர்ஜீனியா கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஆண்ட்ருவை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.














