• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/11
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச துறை மற்றும்  கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள  சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (10) தமிழரசுக் கட்சி எம்.பி பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

சத்தியலிங்கம் எம்பி தமது கேள்வியின் போது, சுமார் பத்தாயிரம் தற்காலிக, அமைய அடிப்படையிலான ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் ரயில் கடவை காப்பாளர்களும் உள்ளடக்கப்படுகின்றனரா என வினவினார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதவளிக்கையில்,

ரயில் கடவை காப்பாளர்களுக்கு அவர்கள் இதுவரை பெற்று வந்த 7500 ரூபா கொடுப்பனவை பதினையாயிரம் ரூபாவாக  அதிகரிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

எனினும் அதன் மூலம் ரயில்வே கடவைகளில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை முழுமையாக நிவர்த்தியடையும் என நாம் கூற முடியாது. அதற்கு நீண்ட கால வேலைத் திட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

அரசாங்கமானது  நிரந்தரமற்ற சேவை நிலையில் உள்ளவர்களை ஒவ்வொரு மட்டத்தில்  சேவைகளுக்காக நியமித்துள்ளது. அந்த வகையில் சுமார் 9,800 பேரை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் சில தொழில்துறைக்காக இணைத்துக் கொள்ளும் போது அவர்கள் தேவையான கல்வித் தகைமையைக் கொண்டிருக்க வேண்டும்.

அந்த வகையில் ரயில் கடவைக் காப்பாளர்கள் மட்டுமன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களைக் குறிப்பிடும்போது  அவர்களில் 700 பேருக்கு நாம் நியமனங்களை வழங்கினோம் மேலும் 300 பேர் உள்ளனர்.

அவர்கள் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும். சித்தியடைந்தமை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

அதன் பிரகாரம் ரயில் கடவை காப்பாளர்களுக்கும் அவ்வாறான தகைமை கோரப்படுகிறது. அந்த வகையில் அனைவரையும் அரசாங்கம் நிரந்தரமாக்கும் என்பதை என்னால் கூற முடியாது. எனினும் பொதுவாக சுமார் 10,000 நிரந்தரமற்ற ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரச துறை மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள தற்காலிக மற்றும் அமைய என நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜப்பானில் பிரதமர், அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு

Next Post

மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Related Posts

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!
இலங்கை

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

2026-02-04
காலநிலை தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

2026-02-04
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

2026-02-04
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!
இலங்கை

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

2026-02-04
இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!
இலங்கை

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

2026-02-04
சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!
கிளிநொச்சி

சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!

2026-02-04
Next Post
மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இந்தியாவின் வரி குறைக்கப்படும் – ஜனாதிபதி ட்ரம்ப்

இந்தியாவின் வரி குறைக்கப்படும் - ஜனாதிபதி ட்ரம்ப்

வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்!

வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

0
நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

0
காலநிலை தொடர்பான அறிவிப்பு!

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

0
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு

0
இந்தியாவுடனான உறவு தொடரும் – ரஷ்யா

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.