தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று (14) காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அவருக்கு எதிராக நேற்று பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் வந்துள்ளது.
போலியான முறைப்பாடு சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக ஹல்லோலுவவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா நேற்று பிடியாணை பிறப்பித்தார்.
நாரஹேன்பிட்டி பகுதியில் தான் பயணித்த வாகனத்தின் மீது ஒரு குழு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி ஹல்லோலுவ முறைப்பாடு அளித்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலயைகத் தவறிவிட்டார்.
அதன்படி, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக பிடியாணையை பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.














