ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று:
காற்று திசை மாறி வீசும், காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை இருக்கும்.
கடல் நிலை:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிதமானதாக இருக்கும்.














