ராவல்பிண்டியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணிசார்பில் துடுப்பாட்டத்தில் ஜனித் லியனகே 54 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
இந்தநிலையில் 289 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி முதலில் வியாழக்கிழமை நடைபெறவிருந்தது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு நேற்றையதினம் நடைபெற்றது.
இலங்கையை 288 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய பாகிஸ்தான், ( Babar Azam) பாபர் அசாமின் சதம் மற்றும் (Fakhar Zaman) பஹார் ஜமான், (Mohammad Rizwan.)முகமது ரிஸ்வான் ஆகியோரின் அரைச் சதங்கள் உதவியுடன் இலக்கை எளிதில் அடைந்தது.



















