( Barnard Castle) பர்னார்ட் கோட்டையில் உள்ள (River Tees) டீஸ் ஆற்றில் 20 வயதுடைய ஒரு பெண் ஒருவர் படகில் சென்றபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பல்வேறு அவசர சேவைகளும் மற்றும் மீட்புக் குழுக்களும் ஈடுபட்டு இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் கடந்த சனிக்கிழமை பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் குறித்து ( Durham ) துர்ஹாம் காவல் துறையினர், குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















