இந்திய சினிமாவின் ‘ஹீ-மேன்’ என்று அன்புடன் அழைக்கப்படும் போலிவுட் நட்சத்திரம் தர்மேந்திரா (Dharmendra), இன்று (24) மும்பையில் தனது 89 ஆவது வயதில் காலமானார்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலான புகழ்பெற்ற வாழ்க்கையுடன், தலைமுறைகள் தொடர்ந்து போற்றும் ஒரு சினிமா மரபை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
அவரது மறைவிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், தர்மேந்திராவின் இழப்பு “இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது” என்று கூறினார்.
தன்னை ஒரு எளிய மனிதர் என்று அடிக்கடி வர்ணித்துக் கொண்ட தர்மேந்திரா, தனது கோடிக்கணக்கான ரசிகர்களிடமிருந்து அசாதாரண பாசத்தையும் நம்பிக்கையையும் பெற்றார்.
60 ஆண்டுகள் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, போலிவுட் சினிமாவில் தன்னுடைய தனித்திறமையால் அழியா தடம் பதித்தவர் தர்மேந்திரா.
1960-ம் ஆண்டு வெளியான ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் தர்மேந்திரா.
இவர் நடிப்பில் வெளியான ‘ஷோலே’ படம் பெரிய அளவில் ஹிட்டடித்ததால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார் தர்மேந்திரா.
பஅவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Ikkis’ திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.



















