மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் புதிய புத்தர் சிலை விடயம் மற்றும் சிங்கள குடியேற்றங்களை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை வீழ்ச்சியடைந்த நாட்டை ரணில்விக்ரமசிங்க கடடியழுப்பியதாக பலர் எண்ணுவதாகவும் . உண்மையிலேயே ரணில்விக்ரமசிங்க வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்பவில்லை என்பதுடன் மாறாக .அந்த நெருக்கடியை அவர் மக்கள் மீது சுமத்திச்சென்றதாக புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடலின் போது மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்
லண்டன், வெம்பிளியில் புலம் பெயர் தமிழர் அமைப்பினால், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமை போன்றவற்றிற்கு மூல காரணமாக டில்வின் சில்வா செயற்பட்டார் என புலம்பெயர் தமிழர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இந்தநிலையில், அந்த போராட்டத்தையும் மீறி டில்வின் சில்வா
கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரில்வின் சில்வா, நேற்று பிற்பகலில், லண்டன் – அல்பேட்டன் பகுதியில் உள்ள கட்டிடத்தில் புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
அதற்காக அவர் பயணித்த வாகனத்தை மறித்தே புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
திருகோணமலையில் புதிய புத்தர் சிலை விடயம் மற்றும் சிங்கள குடியேற்றங்களை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
எனினும் லண்டன் பொலிசார் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி, ரில்வின் சில்வாவின் வாகனம் செல்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன














