இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான தேசிய பரிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருவதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு சுமார் 55,000 புதிய நோயாளிகள் பதிவாவதாகவும் 08 ஆண்களில் ஒருவருக்கு இந்த நோய் இருப்பதாகவும் இது ஆண்களுக்கு மிகவும் பொதுவான புற்றுநோயாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நோயின் தீவிர நிலை பகுதிகளில் உள்ளவர்கள் மரணமடையும் அபாயம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறிகுறிகள் இல்லாதபோதிலும் நோய் கண்டறியப்பட்ட இங்கிலாந்து அணியின் கெவின் கிப்பிள் போன்றவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் குறித்தும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அறிகுறிகள் ஏதுமின்றி அவரது புற்றுநோய் பரவி தற்போது அவரின் உயிரைப் பறிக்கும் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதை அடுத்து இந்த நோய் குறித்து முன்னாள் பிரதமர்கள் உட்பட 120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நவீன நோயறிதல் முறைகள் இப்போது பாதுகாப்பானதாகவும், துல்லியமானதாகவும் இருப்பதை ஆதாரமாகக் காட்டி, திட்டத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இந்த நோயறிதலில் பயன்படுத்தப்படும் புரோஸ்டேட்- குறிப்பிட்ட ஆன்டிஜென் (PSA) சோதனைகளின் துல்லியம் குறித்த கவலைகள் இன்னும் உள்ளதாகவும் அதே வேளையில் அதிக ஆபத்துள்ள குழுக்களில் கருப்பின ஆண்களும், குடும்பத்தில் புற்றுநோய் வரலாறு உள்ளவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.














