வட அயர்லாந்தில் அமைந்துள்ள இளவரசர் ஆண்ட்ரூ வே என்ற சாலையின் பெயரை மாற்றுவது தொடர்பாக உள்ளூர் நிர்வாக மன்றம் தீர்மானித்துள்ளது.
மிட் மற்றும் ஈஸ்ட் ஆன்ட்ரிம் கவுன்சில் ( Andrew Mountbatten-Windsor) ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் மீதுள்ள பொதுமக்களின் அவமதிப்பு காரணமாகவும், மன்னர் அவரை பொது வாழ்வில் இருந்து நீக்கியதாலும் குறித்த உள்ளூர் நிர்வாக மன்றம் இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது.
இந்தச் செயல்பாடானது வங்கி விவரங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற தனிப்பட்ட ஆவணங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக குடியிருப்பாளர்களுக்குச் சவால்களை உருவாக்கலாம் என்று கவுன்சில் எச்சரிக்கிறது.
கவுன்சிலர்கள் ராணி இரண்டாம் எலிசபெத் போன்ற வேறு ஒரு அரச குடும்பத்தின் உறுப்பினரின் நினைவாக புதிய பெயரை வைக்க முன்மொழிந்துள்ளனர்.
மேலும் இந்த பெயர் மாற்றத்திற்கான சட்டரீதியான செயல்பாடுகள் மற்றும் பொது ஆலோசனைகளைத் தொடங்க உள்ளனர்.














