நியூசிலாந்தில் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று, அவர்களின் உடல்களை சூட்கேஸ்களில் மறைத்து வைத்த தாய் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எட்டு வயது யூனா ஜோ மற்றும் ஆறு வயது மினு ஜோ ஆகியோரின் அதிர்ச்சியூட்டும் கொலைகளில் செப்டம்பரில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஹக்யுங் லீ, பிணைக்கு தகுதி பெறுவதற்கு முன்பு குறைந்தது 17 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும்.
2018 ஆம் ஆண்டு தனது கணவர் இறந்த சிறிது நேரத்திலேயே நடந்த கொலைகளின் போது தான் புத்திசுவாதீனமாக இருந்ததாக 45 வயதான லீ வாதிட்டார்.
கொலைகளுக்குப் பின்னர், லீ தனது பெயரை மாற்றிக் கொண்டு நியூசிலாந்தை விட்டு வெளியேறினார்.
2022 செப்டம்பரில் தென் கொரியாவில் – அவர் பிறந்த இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில் நியூசிலாந்திற்கு மீண்டும் நாடு கடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.














