2025 வரவு செலவு திட்டத்தில் ஒரு தலைமுறைக்கான மிகப்பெரிய வளர்ச்சி உந்துதலை முன்னெடுத்துச் செல்வதாக இங்கிலாந்து நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், கணிசமான £30 பில்லியன் நிதி இடைவெளியை ஈடுகட்டவும் பொது நிதிகளைக் கட்டுப்படுத்தவும், பலவகையான புதிய வரிகளை அதிகரிக்கவும் அவரால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் வரிகளை உயர்த்தும் நடவடிக்கைகளில் முக்கியமானதாகவும் , வருமான வரி வரம்புகளை 2028க்கு அப்பாலும் நீட்டித்து, வருமான வரி வரம்பு முடக்கத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் வரிகளை மீண்டும் உயர்த்த மாட்டேன் என்று முன்னதாக கூறியிருந்த நிலையில் தற்போது வரி உயர்வை மேற்கொள்வது முந்தைய வாக்குறுதிக்கு துரோகம் என்று கூறி, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதேவேளை, இந்த வரவுசெலவு திட்டம் மூலம் வாழ்க்கைச் செலவு உள்ள குடும்பங்களுக்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதன்படி உள்கட்டமைப்பு, வீட்டுவசதி, பாதுகாப்பு, கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்வதை உறுதியளிக்கும் வகையில், ஒரு தலைமுறையில் வளர்ச்சிக்கான மிகப்பெரிய உந்துதலுடன் முன்னேறுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.














