(Oxfordshire) ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள (Kidlington ) கிட்லிங்டன் அருகே நாற்பது அடி உயரமுள்ள சட்டவிரோதக் கழிவு மலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இங்கிலாந்து பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கான அச்சுறுத்தல் காரணமாக, சுற்றுச்சூழல் முகமை (EA) இந்த நிலைமையை “முக்கியமான சம்பவமாக” அறிவித்துள்ளது.
இந்தச் சட்டவிரோதச் செயலுடன் தொடர்புடையதாக, (Guildford) கில்ட்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையானது தென் கிழக்கு பிராந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு மற்றும் சுற்றுச்சூழல் முகமை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாகும் என குறிப்பிடப்படுகிறது.
இந்தக் கைது நடவடிக்கையானது, குடியிருப்பாளர்களுக்கு நீதியை வழங்குவதற்கும், இந்த மோசமான குற்றத்தைச் செய்தவர்களை தண்டிப்பதற்கும் முதல் படியாகும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.



















