நாட்டின் சில முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மின்சார விநியோகம் மற்றும் அதை மீள்நிலைப்படுத்துதல், எரிபொருள் விநியோகம், மருத்துவமனை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சேவைகள், பயணிகள் மற்றும் பொருட்களுக்கான பொது போக்குவரத்து, நீர்வழங்கல் மற்றும் வடிகால் சேவைகள் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.














