கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனையில் இந்திய மருத்துவக் குழுவால் முழுமையாக செயல்படும் கள மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.
அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆப்ரேஷன் சாகர் பந்து (Operation Sagar Bandhu) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது கடுமையான பாதிப்புக்குள்ளான சமூகத்திற்கு அதிர்ச்சி சிகிச்சை, அறுவை சிகிச்சை திறன், அம்பியூலன்ஸ்கள் போன்ற முக்கியமான சேவைகளை நேரடியாக வழங்குகிறது.
அதேநேரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர, உயிர் காக்கும் மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது.















