முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 மார்ச் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று உத்தரவிட்டார்.
2022 நவம்பர் மாதம், சந்தேக நபர்கள் காவல்துறை கட்டளைச் சட்டம் மற்றும் நெடுஞ்சாலை கட்டளைச் சட்டத்தை மீறி கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் ஒன்றை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பிற பெண் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.
உண்மைகளைக் கருத்தில் கொண்ட தலைமை நீதிவான், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக வழக்கை மார்ச் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.














