‘பிரித்தானியா இன்னும் ஒரு கிறிஸ்தவ நாடு’ என்று ஒரு முஸ்லிம் மாணவரிடம் கூறியதற்காக, லண்டன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர், சிறுவர்களுக்கான கழிவறைகளில் உள்ள தொட்டிகளில் கால்களைக் கழுவியதற்காக மாணவர்களைக் கண்டித்து, இஸ்லாம் தொடர்பில் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது.
அவர் 6 ஆம் வகுப்பு மாணவர்களிடத்தில், இஸ்லாம் இங்கிலாந்தில் ஒரு சிறுபான்மை மதம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், ஒரு மைல் தொலைவில் ஒரு இஸ்லாமியப் பாடசாலை இருப்பதாகவும், நீங்கள் இங்கு கற்பதற்கு பதிலாக அங்கு சேர்ந்து கல்வி பயிலாலாம் என்று குறித்த ஆசிரியர் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் அளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.












