அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் கேமரூன் கிரீன், அபுதாபியில் நடந்து வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் தேடப்பட்ட வீரராக தனது பெயரை நிலைநிறுத்தியுள்ளார்.
2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் விக்கெட் காப்பாளர்களுக்கான மூன்றாவது செட் ஏலம் நடைபெறுகிறது.
இதுவரை, வெங்கடேஷ் ஐயர் 7 கோடி ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 2 கோடி ரூபாவுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லிர் 2 கோடி ரூபாவுக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
கேமரூன் கிரீன் 25.20 கோடி ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கேமரூன் கிரீனுக்காக கடுமையான ஏலப் போரில் ஈடுபட்டன, ஆனால் ஷாருக்கானுக்குச் சொந்தமான கொல்கத்தா அணி அவரை ரூ. 25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
சகநாட்டவரான மிட்செல் ஸ்டார்க்கின் (ரூ. 24.75 கோடி, ஐபிஎல் 2024) சாதனையை இது முறியடித்து.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு விற்கப்பட்ட வெளிநாட்டு வீரராக ஆனார்.
இன்று மொத்தம் 369 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். சர்பராஸ் கான், பிரித்வி ஷா, லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற முக்கிய வீரர்கள் விற்கப்படாமல் உள்ளனர்.

















