லிவர்பூலில் (Paul Doyle) பால் டாய்ல் என்பவர் தனது காரை ஆயுதமாகப் பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது அணிவகுப்புத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
31 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவருக்குச் இன்றையதினம் தண்டனை வழங்கப்பட உள்ளது.
மேலும் தான் தனது குடும்பத்தின் வாழ்க்கையை “நாசமாக்கிவிட்டதாக” அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கூட்டத்தின் நடுவே இருந்த முன்னாள் ராணுவ வீரர் டேனியல் பார் என்பவர், ஓடும் காரில் குதித்து அதனை நிறுத்தியுள்ளார்.
எதிர்ப்பான கூட்டத்தின் மத்தியில் போலிஸ் அதிகாரிகள் தைரியமாக செயல்பட்டு குறித்த சந்தேகநபரை ஒரு வாகனத்திற்குள் பத்திரமாக அடைத்தனர்.
நீதிமன்றத்தில் தாக்குதலின் காட்சிகள் திரையிடப்பட்டபோது, குறித்த சந்தேகநபர் அழுததுடன் மேலும் அவர் கோபத்தில் இச்செயலைச் செய்ததாகக் கூறியுள்ளார். இந்நிலையில் வழங்கப்படவுள்ளது.
















