மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை (19) முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படிஇ எதிர்வரும் 22ஆம் திகதியும் மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன் நத்தார் விடுமுறையின் பின்னர் திட்டமிட்டபடி இம்மாதம் 29ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் மதுபானி பியசேன தெரிவித்துள்ளார்.













