கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் உத்தியோகபூர்வ கடமைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்புடைய கடிதம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, வைத்தியர் பெல்லானா, ஒரு அரசாங்க அதிகாரியாக பொறுப்பான பதவியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பல்வேறு ஊடக தளங்கள் மூலம் நாட்டிற்குள் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி, பொது அமைதியின்மைக்கு பங்களித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.














