அசாமின் ஹோஜாய் (Hojai) மாவட்டத்தில் இன்று (20) அதிகாலை சாய்ராங் – புது டெல்லி இடையிலான பயணத்தை மேற்கொள்ளும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுடன் யானைகள் கூட்டமொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் எட்டு காட்டு யானைகள் உயிரிழந்ததாகவும், ஒரு யானை காயமடைந்ததாகவும் இந்திய வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இந்த விபத்தில் குறித்த ரயிலின் ஐந்து பெட்டிகளும் இயந்திரமும் தடம் புரண்டன, எனினும், அதில் பயணித்த பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
புது டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 2.17 மணியளவில் ஹோஜாய் மாவட்டத்தின் சாங்ஜுராய் பகுதியில் யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இதனால், குறித்த மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், பல ரயில்கள் மாற்றுப் பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.















