தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் மேற்கே உள்ள பெக்கர்ஸ்டல் நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.
இரண்டு வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய நபர்கள், டவுன்ஷிப்பில் உள்ள ஒரு உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பொது மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும்போது தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க பொலிஸ் சேவை குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1.00 மணிக்கு நிகழந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை.
மேலும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
















