இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார சுபசிங்கவுடனான (Shantha Pathma Kumara Subasingha) தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றவியல் மிரட்டல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் எம்பிலிப்பிட்டிய பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார சுபசிங்க உள்ளிட்ட குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளின் இரத்த மாதிரியை அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
டிசம்பர் 20 ஆம் திகதி கலுகல விகாரைக்கு அருகே நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் வந்த ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாகவும், தனது மோட்டார் சைக்கிள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கான்ஸ்டபிள் முன்னதாக முறைப்பாடு அளித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டி குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















