கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.
இதனால், அனைத்து ரயில் சேவைகளிலும் குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்படக் கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்கள் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகமவுக்கு இயக்கப்படும் ஒரு விரைவு ரயில் காலை 9.30 மணியளவில் தடம் புரண்டது.
எவ்வாறெனினும், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.















