டெக்ஸாஸின் கால்வெஸ்டன் (Galveston) அருகே திங்கட்கிழமை (23) ஒரு இளம் மருத்துவ நோயாளி மற்றும் ஏழு பேரை ஏற்றிச் சென்ற மெக்சிகன் கடற்படையின் சிறிய விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மேலும், விபத்தினை அடுத்து டெக்சாஸ் கடற்கரையில் உள்ள நீர்ப்பரப்பில் தேடல் நடவடிக்கைள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்தவர்களில் நான்கு பேர் கடற்படை அதிகாரிகள், நான்கு பேர் பொதுமக்கள், அதில் ஒரு குழந்தையும் அடங்கும் என்று மெக்சிகோ கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விபத்தில் யார் உயிரிழந்தவார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் இருவர் மிச்சோ மற்றும் மாவ் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள்.
இது கடுமையான தீக்காயங்களுக்கு ஆளான மெக்சிகன் சிறுவர்களுக்கு உதவி வழங்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
இந்த விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படையின் பெட்டி அதிகாரி லூக் பேக்கர் உறுதிப்படுத்தினார்.
விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.

















